BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
ப்பா.. வேற லெவல்.! இணையத்தை மிரளவைக்கும் நயன்தாராவின் கனெக்ட்.! வைரலாகும் திகிலூட்டும் வீடியோ!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவருக்கு ஹீரோக்களுக்கு இணையாக ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. நடிகை நயன்தாரா அண்மையில் தனது 38வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
இந்த நிலையில் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் கனெக்ட் படக்குழு மிரட்டலான டீசரை வெளியிட்டுள்ளது. கனெக்ட் திரைப்படத்தை அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார். மேலும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு சொந்தமான ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் சத்யராஜ், வினய் ராய், ஹனியா நபிஸ், அனுபம் கெர் உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். படம் ஹாரர் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது.
இப்படத்திற்கு மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவு செய்துள்ளார். கனெக்ட் திரைப்படம் டிசம்பர் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் பார்ப்போரை திகிலூட்டும் வகையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்ட நிலையில் இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது.