சினிமா

நாயகி நடிகைக்கு அட்வைஸ் செய்த நயன்தாரா! அனுபவம் பேசுதுபோல!

Summary:

Nayanthara advice to serial actress babri kosh

ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. ஹோம்லி லூக்குடன் கோடம்பாக்கத்திற்கு வந்தவர் இன்று லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் அளவிற்கு வளர்ந்துவிட்டார். சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை நயன்தாரா என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

விஜய், அஜித், சூர்யா, ரஜினி என தமிழ் சினிமாவின் அணைத்து ஜாம்பவான்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார் நயன்தாரா. இதுமட்டும் இல்லாமல் தனி ஒரு நடிகையாக பல்வேறு படங்களில் நடித்துவரும் இவர் அதிலும் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளார். தற்போது நானும் ரௌடிதான் பட இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் இருப்பதாக பேசப்படுகிறது.

இந்நிலையில் புது படம் ஒன்றில் நடித்துவருகிறார் நயன்தாரா. அதில் நயனுக்கு தோழியாக பிரபல நாயகி சீரியலில் கண்மணி கதாபாத்திரத்தில் வரும் பாப்ரி கோஷ் நடித்துவருகிறார். நாடகத்தில் வருவதுபோலவே பாப்ரி கோஷ் நிஜத்திலும் மிகவும் ஜாலியான கேரக்டர். இதனை பார்த்த நயன்தாரா நீ நீயகேவே இரு, இதுபோன்று எப்போதும் மகிழ்ச்சியாக, ஜாலியாக இரு என அட்வைஸ் செய்துள்ளார்.


Advertisement