சினிமா

நவரச நாயகன் கார்த்திக் கல்யாணத்தின் போது எப்படியுள்ளார் பார்த்தீர்களா! அட.. அதுல இப்படியொரு சீக்ரெட் இருக்கா!!

Summary:

தமிழ் சினிமாவில் 80, 90ஸ் காலகட்டங்களில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்

தமிழ் சினிமாவில் 80, 90ஸ் காலகட்டங்களில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இளம்பெண்களின் கனவுகன்னியாக திகழ்ந்தவர்  நவரச நாயகன் கார்த்திக். இவர் மூத்த நடிகர் முத்துராமனின் மகன் ஆவார்.  இவருக்கென அக்காலகட்டத்தில் மட்டுமின்றி தற்போதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

பின்னர் சில காலங்கள் சினிமாவிற்கு இடைவெளிவிட்டிருந்த அவர் மீண்டும் குணச்சித்திர நடிகராக சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். மேலும் மிரட்டலான வில்லனாக கூட சில படங்களில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது அவரது மகன் கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடித்து இளம்பெண்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

நடிகர் கார்த்தி சோலைக்குயில் என்ற படத்தில் நடித்த போது அவருடன் நடித்த ராகினி என்பவரை 1988 ஆம் ஆண்டு முதல் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு கௌதம், கைன் என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கார்த்தி தனது முதல் மனைவியை விவாகரத்து செய்தார். பின் ராகினியின் சகோதரியான ரதி என்பவரையே இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவருக்கு தீரன் என்ற ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கார்த்திக்கின் இரண்டாவது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement