நாட்டாமை வெளியாகி 29 ஆண்டுகள் நிறைவு.. நினைவு கூறும் ரசிகர்கள்.!Nattamai movie memory 29 years

தமிழ் சினிமாவில் 90களில் மிக முக்கிய இயக்குனராக இருந்தவர் கே எஸ் ரவிக்குமார். இவருடைய இயக்கத்தில் கடந்த 1994 ஆம் ஆண்டு வெளியான நாட்டாமை திரைப்படம் மிகப்பெரிய சாதனை படைத்தது. இந்த படத்தில் சரத்குமார் இரட்டை வேடங்களிலும், அவர்களுக்கு ஜோடியாக குஷ்பூ மற்றும் மீனா நடித்திருந்தனர்.

Nattamai

அந்த காலத்திலேயே நாட்டாமை திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற செந்தில், கவுண்டமணி காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிக்கும் படியாக பேசப்படுகிறது.

இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பின்னர் தான் சரத்குமார் முன்னணி நடிகராக உருவானார். அந்த வகையில் இந்த திரைப்படம் பட்டித்தொட்டி எங்கும் சூப்பர் ஹிட்டானது. இன்றளவும் கூட டிவியில் ஒளிபரப்பானால் இந்தப் படத்தை பார்க்க ரசிகர்கள் கூட்டம் உள்ளனர்.

Nattamai

இந்த நிலையில் நாட்டாமை திரைப்படம் வெளியாகி 29 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் தற்போது நாட்டமை திரைப்படத்தின் மீம் டெம்ப்ளேட் மூலம் நினைவு கூர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.