மேக்கப் வீடியோ வெளியிட்டு ஹேப்பியான நியூஸ் சொன்ன நடிகை நதியா! என்னனு பார்த்தீர்களா!

மேக்கப் வீடியோ வெளியிட்டு ஹேப்பியான நியூஸ் சொன்ன நடிகை நதியா! என்னனு பார்த்தீர்களா!


Nathiya going to act in thrisyam 2 movie

தமிழ் சினிமாவில் பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர்  நடிகை நதியா. கொள்ளை அழகில் ஜொலித்த அவர் இளைஞர்களின் கனவு நாயகியாக வலம்வந்தார். அப்படத்தை தொடர்ந்து நடிகை நதியா ரஜினிகாந்த், விஜயகாந்த் பிரபு, சுரேஷ், மோகன் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஜோடியாக நடித்து உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தார்.

நதியா தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் சிரிஷ் காட்போலே என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவருக்கு இரு மகள்கள் உள்ளனர். ஆனாலும் இளமை குறையாமல் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இருக்கும் நடிகை நதியா பின்னர் நீண்ட காலங்களுக்கு பிறகு எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடிப்பது மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அண்மையில் தான் மேக்கப் போடும் வீடியோவை வெளியிட்டு த்ரிஷ்யம் 2 ஷூட்டிங்கிற்கு தயாராகி விட்டதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் தெலுங்கு த்ரிஷ்யம் 2 படத்தில் நதியா கீதா பிரபாகர் நடித்த காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.