சினிமா

தலைவி திரும்ப வந்துட்டாரே! நடிகை நமிதா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து கமெண்ட் செய்யும் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.

Summary:

Namitha latest photo

தமிழ் சினிமாவில் நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான ஏய் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நமிதா. அதனை தொடர்ந்து விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் அனைவரையும் அன்பாக மச்சான் என அழைப்பது அனைவரும் ரசிக்கும் வகையில் இருக்கும்.

ஆனால் ஒரு பட குண்டானதால் பட வாய்ப்புகள் குறைய தொடங்கின. சிறிது இடைவெளியில் இருந்த நமிதாவுக்கு பிக்பாஸ் சீசன் 1யில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதில் கலந்து கொண்டு மீண்டும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு தயாரிப்பாளரான வீர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தற்போது மீண்டும் படங்களில் நடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.


Advertisement