சினிமா

தர்பாரில் சூப்பர் ஸ்டாரின் பெயர் இதுவா? எதற்காக அந்த பெயரை வைத்துள்ளார்கள் தெரியுமா??

Summary:

Name for rajini in tharpar movie

jபேட்ட படத்தை தொடர்ந்து AR முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார். இதில் ரஜினி போலீஸ் ஐ.பி.எஸ் அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துவருகிறார். 

இந்நிலையில் தர்பார் திரைப்படத்தின் படபிடிப்பு வேலைகள்  விறுவிறுப்பாக முடிவடைந்த நிலையில் படம் வெளியாவதற்கான பின்னணி வேலைகள்,  தொழில்நுட்ப வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாகும் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 


 இந்நிலையில் படம் வெளியாவதற்கு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள நிலையில், தர்பார் படத்தில் சூப்பர் ஸ்டாரின் பெயர் ஆதித்யா அருணாச்சலம் என தகவல் வெளிவந்துள்ளது. இதில் அருணாச்சலம் என்பது முருகதாஸின் தந்தை பெயர் மற்றும் ஆதித்யா என்பது அவரின் மகனின் பெயர். இந்நிலையில் அவர்கள் இருவரது பெயரையும் சேர்த்து ரஜினிக்கு ஆதித்யா அருணாச்சலம் என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 


Advertisement