"படப்பிடிப்பின் போது ஹீரோ என்னை டார்ச்சர் செய்தார்" நித்யா மேனன் பகீர் தகவல்..
யாரையும் மதிப்பதில்லை., சாய்பல்லவி மீது பரபரப்பு புகார் அளித்த பிரபல நடிகர், அதிருப்தி அடைந்த ரசிகர்கள்.!
யாரையும் மதிப்பதில்லை., சாய்பல்லவி மீது பரபரப்பு புகார் அளித்த பிரபல நடிகர், அதிருப்தி அடைந்த ரசிகர்கள்.!

விஜய் இயக்கத்தில் சாய்பல்லவி ,நாக ஸௌரியா நடித்து வெளியான திரைப்படம் “தியா”
சமீபத்தில் இந்த படத்தில் ஹீரோவாக நடித்த நாக ஸௌரியா ஒரு பேட்டியில் சாய்பல்லவி அனைவரிடமும் எரிந்து எரிந்து விழுவார். ஓவராக பந்தா காட்டுகிறார்.
யாருக்கும் மரியாதை கொடுப்பதில்லை என்று அடுக்கடுக்கான புகார்களை கூறியுள்ளார்.மேலும் அவர் கூறியதை சாய் பல்லவியுடன் நடித்த நடிகர் நாணியும் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், இது குறித்து பதிலளித்துள்ள சாய்பல்லவி , நான் படப்பிடிப்பு தளத்தில் எப்போதுமே துறுதுறுவென இருப்பேன்.
ஆனால், நாகஸௌரியா எனக்கு ஆப்போசிட்.யாருடனும் அதிகமாக பழகமாட்டார். அதனால், நானும் அவரின் விஷயங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவேன் என்று கூறினார்.
மேலும் அவர் அளித்த பேட்டியை பார்த்த பிறகு இயக்குனர் விஜயிடம் பேசினேன்.
அவர் இதனை பெரிதாக எடுத்துகொள்ளவேண்டாம் என்று அட்வைஸ் கூறினார். ஒரு வேளை, நாக ஸௌரியாவை எனக்கே தெரியாமல் புண்படுத்தியிருக்கலாம். அதற்கு மன்னிக்கவும் என கூறியுள்ளார்.
இது ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.