எனக்கு பொருத்தமான ஜோடி இவர்தான்! நடிகர் நாக சைதன்யா யாரை கூறியுள்ளார் தெரியுமா?? ஷாக்கான ரசிகர்கள்!!

எனக்கு பொருத்தமான ஜோடி இவர்தான்! நடிகர் நாக சைதன்யா யாரை கூறியுள்ளார் தெரியுமா?? ஷாக்கான ரசிகர்கள்!!



nagachaithanya-said-samantha-is-the-best-pair-to-him

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. அவர் கடந்த 2017 ஆம் ஆண்டு முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் அழகிய, நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த இருவரும்  ஒரு சில காரணங்களால் பிரிய போவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தனர்.

இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அவர்களது விவாகரத்திற்கு காரணம் இதுதான் என பல தகவல்களும் இணையத்தில் வலம்வந்தது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் முதன் முறையாக விவாகரத்து பற்றி பேசிய நாக சைதன்யா சமந்தா சந்தோசமாக இருந்தால், தனக்கும் சந்தோசம்தான் என்று தெரிவித்திருந்தார்.

nagachaitanya

அதனைத் தொடர்ந்து அண்மையில் பேட்டி ஒன்றில் அவரிடம், சினிமாவில் உங்களுக்கு பொருத்தமான ஜோடி என யாரை நினைக்கிறீர்கள்? என கேட்டதற்கு அவர் சமந்தா என்று கூறியுள்ளார். மேலும் எந்த படத்தை  ஹிந்தியில் ரீமேக் செய்தால் நன்றாக இருக்கும் என கேட்டதற்கு அவர் சமந்தா நடித்த மஜ்லி படத்தை கூறியுள்ளார்.