புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
நடிகர் நாசர் பெயரில் மோசடி.! போலீசில் புகாரளித்து நடிகர் சங்கம் விடுத்த வேண்டுகோள்!!
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நீண்ட காலமாக நடிகர் சங்க கட்டிடம் கட்டும்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக பல நடிகர்களும் நிதியுதவி செய்து வருகின்றனர். நடிகர் நாசர் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சங்க கட்டிடம் தொடர்பாக சிலர் நடிகர் நாசர் பெயரில் போலியாக பணம் வசூலிப்பதாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டுள்ளது.
அதில், தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்டுவது சம்பந்தமாக தலைவர் நாசர் பெயரில் சில விஷமிகள் முகநூல் மற்றும் எக்ஸ் தளத்தில் போலியாக விளம்பரபடுத்தி பொதுமக்கள் பார்வையில் சங்கத்தின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் போலியான விளம்பரம் கொடுத்துள்ளனர். அந்த நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக்கோரி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக, சென்னை பெருநகர காவல்துறை ஆணையர், காவல் ஆய்வாளர், சைபர்க்ரைம், பரங்கிமலை அவர்களிடம் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த விஷகிருமிகள் மீது நடவடிக்கை எடுக்க விசாரணை நடைப்பெற்று வருகிறது. எனவே உண்மைக்கு மாறான இந்த பொய்யான விளம்பரங்களை யாரும் நம்ப வேண்டாம் என குறிப்பிட்டுள்ளனர்.