சினிமா

நான் அவனில்லை பட புகழ் நடிகர் ஜீவன் தற்போதைய நிலை என்ன தெரியுமா..?

Summary:

Naan avan illai jeevan current status

நான் அவனில்லை படத்தில் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ஜீவன். யுனிவர்சிட்டி என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், சூர்யா நடிப்பில் வெளியான காக்க காக்க படத்தில் வில்லனாகவும் அசத்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

அதன்பின்னர் திருட்டுப்பயலே, நான் அவனில்லை படங்களில் தொடர் வெற்றியை கண்டார். அதன் பின் மச்சக்காரன், தோட்டா, நான் அவனில்லை 2 என இவரின் அனைத்து படங்களும் தோல்வி படமாக அமைந்தது.

இந்நிலையில் சுமார் 4  ஆண்டுகளாக இவர் என்ன செய்துகொண்டிருக்கின்றார் என்ற செய்திகள் எதுவும் வெளிவராத நிலையில் தற்போது 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அசரீரி என்ற படத்தின் மூலம் திரைக்கு வர இருக்கின்றார்.

இப்படத்தில் புதுமுக இயக்குனர் ஜிகே இயக்குகிறார். மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்க படுகின்றது.


Advertisement