சினிமா

பிக்பாஸ் முகேனை தொடர்ந்து மீண்டும் மலேசியாவில் இருந்து விஜய் டிவியில் களமிறங்கிய புதிய போட்டியாளர்! யார் அவர் தெரியுமா?

Summary:

Mugen jayasri

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் நடத்தப்படும் வித்தியாசமான நிகழ்ச்சிகளுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாகி கொண்டே தான் இருக்கிறது. இந்த தொலைக்காட்சியில் நடத்தப்படும் ஒவ்வொரு ரியாலிட்டி ஷோவிலும் பலதரப்பட்ட மக்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் மேடையாக அமைக்கிறது.

அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 3 யில் கலந்து கொண்டு மக்களின் மனதை கவர்ந்தவர் மலேசியாவை சேர்ந்த முகேன். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வரை சென்று முதல் பரிசை தட்டிச் சென்றார். அதன் மூலம் அவர் உலகம் முழுவதும் பிரபலமானார்.

அதேபோல் தற்போது துவங்கவுள்ள சூப்பர் சிங்கர் ஜூனியர் 7 ல் மலேசியாவை சேர்ந்த ஜெயஸ்ரீ என்ற சிறுமி கலந்து கொண்டுள்ளார். மேலும் அந்த நிகழ்ச்சியில் டாப் 20 போட்டியாளர்களுள் ஒருவராகவும் வந்துள்ளார். அதனை வைத்து அந்த சிறுமி இறுதி வரை சென்று பட்டத்தை வெல்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 


Advertisement