நடிகர் மோகனை பார்த்து வியப்பில் ஆழ்ந்த தளபதி விஜய்! எதற்கு தெரியுமா?

நடிகர் மோகனை பார்த்து வியப்பில் ஆழ்ந்த தளபதி விஜய்! எதற்கு தெரியுமா?


Mohan vijay

80 களில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக கொடி கட்டி பறந்தவர் நடிகர் மோகன். இவர் நடித்த பல படங்கள் அனைத்தும் இவருக்கு வெற்றி படங்களாகவே அமைந்தது. அதிலும் இவர் படத்தில் பெரும்பாலும் இளையராஜாவின் இசை தான் அமைந்திருக்கும்.

அதுவும் இவரின் படங்கள் வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தது. இவர் இதுவரை 90க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதன் பின் இவர் சிறிது நடிக்காமல் இருந்ததால் படவாய்ப்புகள் குறைய தொடங்கின.

mohan

இந்நிலையில் தற்போது மீண்டும் படத்தில் நடிப்பதற்கு கதை கேட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவர் படங்களின் வெற்றிக்கு இவரின் காஸ்டியூமர் ராஜேந்திரன் தான் முக்கிய காரணம் எனவும் கூறியுள்ளார்.

நடிகர் மோகனை பார்த்து வியந்த நடிகர் விஜய் படங்களில் நீங்கள் அழகாக தெரிய காரணமான அந்த காஸ்டியூமர் யார் என கேட்டாராம். பின்னர் அவரை விஜய்யிடம் அறிமுக செய்து வைத்துள்ளார். அதன் பின்னர் அவர் தான் விஜயின் காஸ்டியூமராக மாறி விட்டதாகவும் நடிகர் மோகன் கூறியுள்ளார்.