சினிமா

பிரபல நடிகரின் வீட்டில் நடந்த மரணம்.! இறுதி சடங்கில் கூட கலந்துகொள்ள முடியாத நிலையில் மகன்.!

Summary:

Mithun Chakraborty’s father Basantakumar dies at 95 in Mumbai

கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு முக்கிய நிகழ்வுகளுக்கு கூட போக முடியாமல் மக்கள் சிக்கி தவித்துவருகின்றனர். இந்நிலையில் பிரபல ஹிந்தி திரைப்பட நடிகர்  மிதுன் சக்ரவர்த்தியின் தந்தை உடல்நல குறைவால் மரணமடைந்த நிலையில், தந்தையின் இறுதி சடங்கிற்குக்கூட செல்லமுடியாமல்  மிதுன் சக்ரவர்த்தி தவித்துவருகிறார்.

ஹிந்தி சினிமாவில் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவர் மிதுன் சக்ரவர்த்தி. நடிகர், பாடகர், பட தயாரிப்பாளர், சமூக சேவகர், தொகுப்பாளர் என பன்முக திறமை கொண்டவர். ராஜ்ய சபை உறுப்பினராகவும் பணியாற்றி இவர் 3 முறை தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

இந்நிலையில், இவரின் தந்தை பசந்த குமார் கடந்த செவ்வாய்க்கிழமை காலை உடல் நல குறைவால் தனது 95 வயதில் காலமானார். தந்தை உயிர் இழந்துள்ள நிலையில், அவரின் மகன் மிதுன் சக்ரவர்த்தி ஊரடங்கு காரணமாக கர்நாடகாவில் சிக்கியுள்ளார். இதனால் தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்க முடியாமல் மிகுந்த வருத்தத்தில் உள்ளார் மிதுன்.

இதனால் பல்வேறு பிரபலங்கள் மிதுனுக்கு தங்கள் ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துவருகின்றனர்.


Advertisement