சினிமா

மின்னலே படத்தில் முதலில் இந்த பிரபல நடிகர் தான் நடிக்க இருந்தாராம்! யார் அவர் தெரியுமா? வெளியான புதிய தகவல்.

Summary:

Minnala movie appbas

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் எப்போது புது விதமான ஸ்டைலை கொண்டு படங்களை இயக்குபவர். இவரின் படங்கள் அனைத்தும் சற்று வித்தியாசமாக தான் இருக்கும். ஆனால் அனைத்து படங்களும் ஓரளவிற்கு நன்றாக ஓடி விடும்.

இவர் இதற்கு முன்பு காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணை தாண்டி வருவாயா, நீ தானே என் பொன் வசந்தம், என்னை அறிந்தால் போன்ற படங்களை இயக்கியுள்ளார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி மொழி படங்களையும் இயக்கியுள்ளார்.

சமீபத்தில் இவர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான என்னை நோக்கி பாயும் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இப்படத்தின் ப்ரோமோஷனில் கலந்து கொண்டு பேட்டியளித்த போது அதில் ஒரு சிலவற்றை பற்றி பேசியிருந்தார். 

அதாவது மின்னலே படத்தில் முதலில் நடிகர் அப்பாஸ் தான் நடிக்க இருந்தாராம். அதற்கு அவர் இரண்டு தயாரிப்பாளரிடம் எல்லாம் பேசினார் என கௌதம் மேனன் கூறினார். ஆனால் ஒரு சில காரணங்களால் அவர் ஹுரோவாக நடிக்க முடியாமல் துணை கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியதாயிற்று என கூறினார். 


Advertisement