சத்தமில்லாமல் நடந்து முடிந்த மின்னல் தீபாவின் இரண்டாவது திருமணம்!! மாப்பிளை இவர்தானா? வைரலாகும் ஜோடியின் புகைப்படங்கள்!

சத்தமில்லாமல் நடந்து முடிந்த மின்னல் தீபாவின் இரண்டாவது திருமணம்!! மாப்பிளை இவர்தானா? வைரலாகும் ஜோடியின் புகைப்படங்கள்!


Minnal deepa got second marriage

சரத்குமார் நடிப்பில் வெளிவந்த மாயி திரைப்படத்தில் வடிவேலுக்கு பெண் பார்க்கபோகும்போது வரும் 'வாம்மா மின்னல்' என்ற டயலாக் என்றுமே ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்றாகும். இதில் மின்னல் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தீபா. இப்படத்தைத் தொடர்ந்து அவர் மின்னல் தீபா என்றே அழைக்கப்பட்டார். 

இப்படத்தை தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் தீபா ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சின்னத்திரைக்கு தாவிய அவர் தற்போது ஜீ தமிழ்  தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் யாரடி நீ மோகினி என்ற தொடரில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மின்னல் தீபாவிற்கு சுப்ரமணி என்பவருடன் எந்த ஆர்ப்பாட்டமுமின்றி மிகவும் எளிமையாக திருமணம் நடைபெற்றுள்ளது. இத்தகைய புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  வெளியிட்டுள்ளார். 

இது நடிகை மின்னல் தீபாவிற்கு இரண்டாவது திருமணம் ஆகும். அவர் கடந்த 2013 ஆம் ஆண்டு ரமேஷ் என்ற நடன உதவி இயக்குனரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதனை தொடர்ந்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இந்நிலையில் தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நடிகை மின்னல் தீபாவிற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.