புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
அந்த பொண்ணு யாருனே தெரியாது.. நாடோடிகள் பட நடிகை பரபரப்பு புகார்! பகீர் விளக்கமளித்த அதிமுக முன்னாள் அமைச்சர்!!
தமிழ் சினிமாவில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நாடோடிகள் படத்தில் துணை நடிகையாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சாந்தினி தேவா. இவர் 2ஜி ஸ்பெக்ட்ரம் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்துள்ளார்.
அதாவது அந்த புகாரில் அவர், மணிகண்டன் தன்னுடன் 5 ஆண்டுகள் குடும்பம் நடத்திவிட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றியுள்ளார். அவரால் சிலமுறை கருக்கலைப்பு செய்துள்ளேன். என்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டால் அவர் எனது அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் என மிரட்டுகிறார் என்று கூறியுள்ளார். மேலும் தனக்கு கொலை மிரட்டல் விடுவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இது பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில், அமைச்சர் மணிகண்டன் சாந்தினியா? அந்தப் பெண் யார் என்றே எனக்கு தெரியாது. எனது புகைப்படங்கள் இருப்பதாகவும், பணம் கொடுத்தால் வெளியே சொல்ல மாட்டோம் என அந்தக் கும்பல் மிரட்டியது. பின்னர்தான் அது பணம் பறிக்கும் கும்பல் என்பது தெரியவந்தது. முதலில் 3 கோடி, பின்னர் 2 கோடி இறுதியாக 30 லட்சம் ரூபாய் கொடுக்குமாறு என்னிடம் பேரம் பேசினர். தவறு செய்தவர்கள்தான் பயப்படணும். நான் ஏன் பயப்பட வேண்டும் என கூறியுள்ளார்.