இளையதளபதி விஜயின் மெர்சல் பாடல்கள் புதிய சாதனை...! ரசிகர்கள் கொண்டாட்டம்...!
இளையதளபதி விஜய் என்றாலே அவரது ரசிகர்கள் தான் முதலில் நம் நியாபகத்திற்கு வரும். அப்படிப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்திருப்பவர் தான் நடிகர் விஜய். மேலும் ரசிகர்கள் வளர்ந்துகொண்டே தான் போகிறார்கள். இதனை போல தான் அவர் படங்களும். வசூல் மழையை பொழிந்துகொண்டு தான் இருக்கின்றன.
இந்நிலையில் சென்ற வருடம் தீபாவளிக்கு வெளியான மெர்சல் படம் வசூலில் சுமார் 200 கோடியை தாண்டியது. இப்படம் பல்வேறு நாடுகளிலும் வெளியாகி வரவேற்பை பெற தயாராகி வருகிறது.
தற்போது இப்படத்தின் பாடல்கள் யூடியூபில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. அது, மெர்சல் பட்த்தின் மொத்த பாடல்களும் 35 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து உள்ளது. இதனை பாடலை வெளியிட்ட சோனி நிறுவனம் தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த சாதனை விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் விஜய் நடித்துள்ள அடுத்த படம் சர்க்கார். அந்த படத்தின் வெற்றிக்காகவும் விஜய் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.