சினிமா

பிக்பாஸ் முகெனுக்கு கிடைத்த தளபதி விஜய்யின் பிகில் ஸ்பெஷல்!

Summary:

megen get bigil special

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய் நடிப்பில் தற்போது பிரமாண்டமாக உருவாகி வரும் படம்  பிகில். அட்லீ இயக்கம் இந்தப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.  இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

தளபதி விஜய், நயன்தாரா, விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி உட்பட பலர் நடித்துள்ளனர் பிகில் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அட்லீ-விஜய் இவர்கள் இருவரும் இணைந்தாலே அந்த படம் செம ஹிட் தான். அப்படி தெறி, மெர்சல் படம் மூலம் சாதனை படைத்துவிட்டனர்.

படமும் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது, இந்த நேரத்தில் சமூக வலைதளங்களில் முழுவதும் பிகில் பற்றிய பேச்சு பரவலாக பேசப்பட்டுவருகிறது. இந்தநிலையில் தற்போது பிக்பாஸ் புகழ் முகெனுக்கு பிகில் ஸ்பெஷல் கிடைத்துள்ளது. தளபதி விஜயின் பிகில் பதிவு செய்த டி-ஷர்ட் அவருக்கு கிடைத்துள்ளது. அந்த புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement