இன்னும் 14 நாட்களில் வீட்டில் நடக்கவிருந்த கொண்டாட்டம்! அதற்குள் நடிகை மீனாவுக்கு இப்படியொரு துயரமா?? சோகத்தில் ரசிகர்கள்!!

இன்னும் 14 நாட்களில் வீட்டில் நடக்கவிருந்த கொண்டாட்டம்! அதற்குள் நடிகை மீனாவுக்கு இப்படியொரு துயரமா?? சோகத்தில் ரசிகர்கள்!!Meena wedding day in 14 days

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின் ஹீரோயினாக அவதாரமெடுத்து  ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார், விஜயகாந்த், பிரபு, அஜித் என பல  பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து டாப் ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் மலையாளம், தெலுங்கு,கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவ்வாறு முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்த நடிகை மீனா கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூலை 12 பெங்களூருவைச் சேர்ந்த கணினி பொறியாளரான வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு நைனிகா என்ற அழகிய மகள் உள்ளார். இவர் தெறி படத்தில் விஜய்யின் மகளாக நடித்து பிரபலமடைந்தார்.

meena

இந்த நிலையில் நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த வித்யாசாகருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டாலும் அவருக்கு நுரையீரலில் பாதிப்பு தீவிரமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மறைவு குடும்பத்தினர் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் 14 நாட்களில் வரும் ஜூலை 12 மீனா மற்றும் வித்யாசாகர் தங்களது திருமண நாளை கொண்டாடவிருந்த நிலையில்  கணவர் வித்யாசாகர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.