வேட்டையன் படம் ஓடிய திரையரங்கில் காலாவதியான பாப்கார்ன்; ரஜினி ரசிகர்கள் ஆவேசம்.!
இவ்ளோ சின்ன பொண்ணா!! எஜமான் படத்தில் நடித்தபோது நடிகை மீனாவின் வயசு என்ன தெரியுமா?? ரஜினியே ஷாக்காகிட்டாராம்.!
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து, 90ஸ் காலகட்டங்களில் இளைஞர்களின் கனவு நாயகியாக, கண்ணழகியாக வலம் வந்தவர் நடிகை மீனா. அவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. இந்நிலையில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர் இன்று வரை பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் திரையுலகில் 40 வருடங்களை வெற்றிகரமாக கடந்த நடிகை மீனாவை பெருமைப்படுத்தும் வகையில் அண்மையில் மீனா 40 என்ற விழாவும் நடைபெற்றுள்ளது.
அதில் அவர் தனது பல சினிமா அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். நடிகை மீனா நடிகர் சிவாஜியுடன் நெஞ்சங்கள் என்ற படத்திலும், அன்புள்ள ரஜினிகாந்த் என்ற படத்தில் ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். பின்னர் அவர் கதாநாயகியாக அவதாரம் எடுத்து ராஜ்கிரணுடன் என் ராசாவின் மனசிலே பின் ரஜினியின் எஜமான் படத்தில் நடித்துள்ளார்.
எஜமான் படத்தில் நடித்த போது நடிகை மீனாவின் வயது 15 தானாம். அதனை கேட்டதும் நடிகர் ரஜினிகாந்த் அவருடன் நடிக்க மிகவும் தயங்கியுள்ளார்.
தன்னுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகையுடன் ஜோடியாக நடிப்பதா என அவர் ஷாக்காகிவிட்டாராம். ஆனாலும் மீனா எஜமான் படத்தில் தனது முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வந்த நிலையில் மீனா ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், பிரபு, சத்யராஜ், அஜித், பார்த்திபன், முரளி, கார்த்திக், பிரபுதேவா என கோலிவுட்டின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.