வதந்தியை பரப்புறாங்க.! ஆனா உண்மையிலே நடந்தது இதுதான்.! உண்மையை உடைத்த நடிகர் மயில்சாமியின் மகன்!!

வதந்தியை பரப்புறாங்க.! ஆனா உண்மையிலே நடந்தது இதுதான்.! உண்மையை உடைத்த நடிகர் மயில்சாமியின் மகன்!!


mayilsamy-son-explain-about-his-father-dead

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து நகைச்சுவை நடிகராக வலம் வந்த மயில்சாமி கடந்த 19 ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையில் மயில்சாமியின் மறைவு குறித்து பல வதந்திகள் பரவி வந்தது. இந்த நிலையில் அன்று என்ன நடந்தது என அவரது மகன்கள் விளக்கமளித்துள்ளனர்.

அவர்கள் கூறியதாவது, அப்பா மரணம் குறித்து பல வதந்திகள் பரவி வருகிறது. ஒவ்வொரு சேனலும் ஒவ்வொரு மாதிரி நியூஸ் போடுகிறார்கள். சிவராத்திரியன்று மாலை  அப்பா டப்பிங் பணிகளை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் கோவிலுக்கு போகலாம் என்று கூறினார். நான் அம்மா, அப்பா எல்லோரும் கேளம்பாக்கம் மேகாநாதேஸ்வரர் சிவன் கோவிலுக்கு சென்றோம். அங்கு அவர் சிவமணி சார்கிட்ட ஜாலியாக பேசிகிட்டு, பாடல் பாடிக்கொண்டு இருந்தார்.

பின் 2.45 மணிக்கு அப்பா வேறொரு கோவிலுக்கு செல்லலாம் கூறினார். அப்போ சிவமணி சார் நீங்க ஹார்ட்பேஷண்ட். வீட்டுக்கு போய் ஓய்வு எடுங்க என்று கூறினார். பின் வீட்டிற்கு வந்த அவர் பசிக்குது என்றார். அம்மா இட்லி செய்து கொடுத்தாங்க. எல்லோரும் சாப்பிட்டோம். கொஞ்ச நேரத்தில் அப்பா சாப்பிட்டது நெஞ்சிலேயே இருக்கு என கூறினார்.

Mayilsami

பின் சுடுதண்ணீர் குடித்த அவர் படுக்கச் சென்றார். பின் எழுந்து சாப்பிட்டது செரிமானமாகவில்லை என கூறியுள்ளார். கொஞ்ச நேரத்திலேயே அம்மா அப்பாவிற்கு மூச்சுவிட கஷ்டமாக இருப்பதாக என்னிடம் கூறினார். உடனே காரில் அவரை நான் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். ஜங்ஷன் போகும்போதே அப்பா என் மீது சாய்ந்துவிட்டார். அதனால் என்னால் காரை ஓட்ட முடியவில்லை.

உடனே அருகில் ஆட்டோ பிடித்து அப்பாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். பின் ராமசந்திரா மருத்துவமனைக்கு சென்றபோது, அவர்களும் அப்பா இறந்துவிட்டதாகவே கூறினர். பின்னரே வீட்டிற்கு சென்று அனைத்து வேலைகளையும் செய்தோம் எனக் கூறியுள்ளார்.