சினிமா

மாஸ்டர் படம் OTTயில் வெளியாகவுள்ளதா? தயாரிப்பாளர் கூறிய புதிய தகவல்..!

Summary:

Master movie relise in OTT?

மாநகரம், கைதி போன்ற வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து முடித்துள்ள படம் தான் மாஸ்டர். இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவுற்ற நிலையிலும், தற்போது நாடு முழுவதும் ஏற்ப்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக படம் வெளியாகாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் வருகைக்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இப்படத்தின் பாடல்கள் வெளியாகி பட்டத்தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் OTTயில் வெளியாகவுள்ளதாக பலரும் கூறி வருகின்றனர்.

ஆனால் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் இது குறித்து புதிய தகவல் ஒன்றை கூறியுள்ளார். அதாவது எத்தனை நாட்கள் ஆனாலும் மாஸ்டர் படம் தியேட்டரில் தான் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார். 


Advertisement