மர்மதேசம், விடாது கருப்பு தொடரில் சிறுவயது ராசுவாக நடித்தது யார் தெரியுமா.? வைரலாகும் புகைப்படம்!

மர்மதேசம், விடாது கருப்பு தொடரில் சிறுவயது ராசுவாக நடித்தது யார் தெரியுமா.? வைரலாகும் புகைப்படம்!


marmadesam-rasu

மர்மதேசம், விடாது கருப்பு என்னும் திகில் தொடர் பல வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அந்த சீரியல் சன்டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகி வருகிறது. தோட்டக்காரமங்கலம் என்ற கிராமத்தில் உள்ள கருப்பண்ணசாமி என்ற தெய்வம் அந்த கிராமத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்து தன் சொல்படி ஆட்டிவித்து வருகிறது, அதன்பின்னால் உள்ள மர்மங்களை உடைக்க போராடும் (தேவதர்ஷினி) ரீனா என்கின்ற டாக்டர்.

 மர்மதேசம் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சிறுவன் ராசு(மாஸ்டர் லோகேஷ்). ராசு தன் சின்னவயதில் இருந்தே தன் கிராமத்தில் நடந்த அக்கிரமங்களை  தன் கண்ணால் பார்த்து வளர்ந்ததால், கருப்பு தன் ஊருக்கு தேவை தான் என நம்புகின்ற ராசு , வட்டிக்கு காசு கொடுக்கிற மற்றும் அடகு பிடிக்கிற பேச்சி கிழவி, ஆக்ரோஷத்துடன் இருக்கும் கருப்பு கோவில் பூசாரி. 

marmadesam

பேச்சி கிழவி தான் அடகு வாங்கிய நகைகளை எல்லாம் 4 பானைகளில் வைத்து எங்கேயோ புதைத்துவிடுவார். பேச்சியின் அட்டகாசம் தாங்காமல் கருப்பு அவளை கொன்று விடும். இதற்கு பிறகு தங்க நகைகளை தேடுவது, யார் கருப்பு என கண்டறிவது என்ற ஆர்வத்துடன்  (தேவதர்ஷினி) ரீனா தேடிவருகிறார். அப்போது சிறிய வயது ராசு கதாபாத்திரத்தில் நடித்த மாஸ்டர் லோகேஷின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.