தனது காதல் மனைவியை விவாகரத்து செய்த பிரபல வாரிசுநடிகர்.! வேதனையுடன் என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!!

Summary:

Manoj manju divorce her lovable wife

பிரபல தெலுங்கு நடிகரும், ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பருமான மோகன்பாபுவின் மகன் பிரபல நடிகர் மனோஜ் மஞ்சு. இவர் தெலுங்கு சினிமாவில் சில படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். மேலும் இவருக்கு விஷ்ணு மஞ்சு என்ற அண்ணனும், லட்சுமி மஞ்சு என்ற அக்காவும் உள்ளனர்.இருவருமே திரையுலகில் பிரபலமாக உள்ளனர்.

 மனோஜ் மஞ்சு கடந்த 2011 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான பிரணிதி என்பவரை கோலாகலமாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தற்போது மனோஜ் மஞ்சு தங்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

அந்த பதிவில் அவர் என் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் கெரியர் குறித்து சில விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கனத்த இதயத்துடன் இதை தெரிவிக்கிறேன். எங்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த இரு வருடங்களுக்கு முன்பு விவகாரத்து பெற்று விட்டோம். அழகான ஒரு உறவு முடிந்துவிட்டது. எங்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, நிறைய வலிகளை அனுபவித்து பின்பே பிரிவது குறித்து முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார். 


Advertisement