நடிகர் அரவிந்த் சாமியின் அப்பா யார் தெரியுமா? பலரும் அறியாத உண்மை!
'மஞ்சுமெல் பாய்ஸ்' டைரக்டரின் அடுத்த பட அறிவிப்பு.. அட கதை இவருடையதா.?!
உண்மை சம்பவம்
மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்பட இயக்குனரான சிதம்பரத்தின் இயக்கத்தில் அடுத்த திரைப்படம் உருவாகுவது பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு சர்வைவல் திரில்லர் திரைப்படம் தான் மஞ்சுமெல் பாய்ஸ்.
அனைத்து மொழிகளிலும் வெற்றி
ஆரம்பத்தில் கும்மாளமாக தொடங்கும் இந்த திரைப்படம் ஒரு கட்டத்தில் மிகப்பெரிய திரில்லரில் அடி எடுத்து வைக்கும். அதன் பின் படத்தின் இறுதிவரை நம்மை பரபரப்புடன் கொண்டு சென்றது. இதனால், இந்த படத்திற்கு மலையாளம் மட்டுமல்லாமல் டப்பிங் செய்யப்பட்ட அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதையும் படிங்க: கேம் சேஞ்சர் படத்தின் ட்ரைலர் வெளியீடு; ஆக்சன்-அரசியலில் கலக்கும் ராம்சரண்.! எஸ்ஜே சூர்யா மாஸ் சம்பவம்.!

குணா பாடல்
இதில் இளையராஜா இசையில் உருவான, 'கண்மணி அன்போடு காதலன்' பாடல் மிகவும் ஸ்பெஷலாக காண்பிக்கப்பட்டு இருக்கும். இதுவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்பட இயக்குனரான சிதம்பரத்தின் அடுத்த படம் எப்போது என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில், தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
ஜீத்து மாதவன் கதை
இந்த புதிய திரைப்படத்தின் கதையை ஆவேஷம் திரைப்பட இயக்குனரான ஜித்து மாதவன் எழுதியுள்ளார். ஆனால், முழுக்க முழுக்க சிதம்பரத்தின் இயக்கத்தில் தான் படம் வெளியாக இருக்கிறது. மலையாளத்தில் உருவாக்கப்படும் இந்த திரைப்படம் இதர மொழிகளில் டப்பிங் செய்யப்பட இருக்கிறது. ஆனால், இதில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை. விரைவில் பட குழு இதற்கான அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: #Breaking: எஸ்வி சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை - சென்னை உயர்நீதிமன்றம் உறுதி.!