ரீ ரிலீஸாகி கொண்டாடுப்படும் மங்காத்தா.! 6 நாட்களில் வாரி குவித்த வசூல் இவ்வளவா!!



Mangattha movie blockbuster collection

வெங்கட் பிரபு இயக்கத்தில், அஜித்குமார் நடிப்பில், வெளிவந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு சூப்பர் ஹிட்டான திரைப்படம் தான் ‘மங்காத்தா’. இப்படத்தில் அர்ஜுன், திரிஷா, வைபவ், பிரேம்ஜி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்நிலையில் ரசிகர்களின் கோரிக்கையை தொடர்ந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மங்காத்தா திரைப்படம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.

அதாவது படம் கடந்த ஜனவரி 23 அன்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும் தமிழ்நாடு முழுவதும் பல திரையரங்குகளும் ரசிகர்களின் கொண்டாட்டதால் திருவிழாவை போன்று காணப்பட்டது. 

இந்நிலையில் மங்காத்தா திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு 6 நாட்கள் நிறைவடைந்த நிலையில்  ₹20 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.