மாமனிதன் ரிலீஸ்! அட.. எப்போ தெரியுமா?? வெளிவந்த தகவல்! உற்சாகத்தில் விஜய் சேதுபதி ரசிகர்கள்!!

மாமனிதன் ரிலீஸ்! அட.. எப்போ தெரியுமா?? வெளிவந்த தகவல்! உற்சாகத்தில் விஜய் சேதுபதி ரசிகர்கள்!!



mamanithan-movie-release-date-announced

தமிழ் சினிமாவில் ஏராளமான மாஸ் திரைப்படங்களில் நடித்து தற்போது பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் ஹீரோவாக மட்டுமின்றி, வில்லனாகவும் களமிறங்கி பேட்ட, மாஸ்டர் படத்தில் மிரட்டியுள்ளார்.
சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் கடைசி விவசாயி. 

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அவர் விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல், விடுதலை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். அந்த படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாமனிதன்.

இந்த படத்தில் காயத்ரி, அனிகா, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இதற்கு எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த நிலையில் மாமனிதன் திரைப்படம் வரும் மே 6ந் தேதி திரையரங்கில் ரிலீஸாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.