நாட்டையே உலுக்கிய சுபஸ்ரீ மரணம்.! மனம்நொந்து மலையாள தயாரிப்பாளர் எடுத்த அதிரடி முடிவு!! குவியும் வரவேற்பு!!

நாட்டையே உலுக்கிய சுபஸ்ரீ மரணம்.! மனம்நொந்து மலையாள தயாரிப்பாளர் எடுத்த அதிரடி முடிவு!! குவியும் வரவேற்பு!!



malayala director announced no banner to mammoothy movie

சென்னை குரோம்பேட்டை பவானி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ என்ற இளம்பெண். அவர்  கனடா செல்வதற்காக தேர்வுகளை முடித்துவிட்டு வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்த போது. பள்ளிக்கரணை பகுதியில் சாலையின் மீடியன் பகுதியில் வைக்கபட்டிருந்த அதிமுக நிர்வாகி ஒருவர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான பேனர் அவர் மீது விழுந்தது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் மீது,  பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியது.  இதில் சுபஸ்ரீ உயிரிழந்தார். தங்களது ஒரே மகளை இழந்து சுபஸ்ரீயின் குடும்பத்தார்கள் கதறி துடித்துள்ளனர். இச்சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

subasri

அதனை தொடர்ந்து பல அரசியல் கட்சிகள் இனி பேனர்கள் வைக்க மாட்டோம் என்று அறிவித்தனர். மேலும் விஜய், சூர்யா போன்ற நடிகர்களும் தங்களது ரசிகர்களுக்கு பேனர்கள் வைக்ககூடாது என தடை விதித்துள்ளனர். அதனை போல அஜித் ரசிகர்களும் இனி பேனர்கள் வைக்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்து நோட்டீஸ் ஒட்டினர்.

இந்நிலையில் சுபஸ்ரீயின் மரணம் தமிழகம் மட்டுமின்றி மலையாள திரையுலகிலும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. மலையாள சினிமாவில் மம்முட்டி நடிப்பில் ஞானகந்தர்வன் என்ற படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தயாரிப்பாளர் ரமேஷ் பிஷ்ரோட் திரைக்கு வரவுள்ள ஞானகந்தர்வன் திரைப்படத்திற்கு பேனர்கள் வைக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளார். இதற்கு மலையாள திரையுலகில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.