சினிமா

விஜய் சேதுபதியின் தனிச்சிறப்பு இதுதான்!! அதனால் தான் அவர் மக்கள் செல்வன்!!

Summary:

Makkal selvan vijay sethubathi

தமிழ்  சினிமாவில் குடும்பப் பின்னணி எதுவும் இல்லாமல் தனது நடிப்புத் திறமையால் முன்னணி நடிகராக வலம் வருகிறார் விஜய் சேதுபதி. திரைத்துறையில் இதுவரை 25 படங்களைக் கடந்திருக்கும் விஜய் சேதுபதி வருடத்துக்கு 7 படங்கள் வரை நடித்திருக்கிறார்.

அந்தவகையில் சமீபத்தில் அவர் நடிப்பில் சீதக்காதி, செக்கச் சிவந்த வானம், பேட்ட, 96 போன்ற படங்கள் வெளியாகின. விஜய் சேதுபதி நடித்த மற்ற படங்களை விட 96 ரசிகர்களால் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலிலும் சாதனை படைத்தது. 

பொதுவாக தமிழ் சினிமாவில் ரசிகர்கள் என்றால் தல அஜித் மற்றும் தளபதி விஜய் இவர்களுக்கு தான் அதிகம், ஆனால் இந்த இரண்டு முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் கூட,  விஜய் சேதுபதியை ரசித்து வருகின்றனர்.

அணைத்து மக்களின் மனதில் இடம்பிடித்துள்ள நடிகர் விஜய் சேதுபதி "மக்கள் செல்வன்" என்றும் போற்றப்பெற்றார். சினிமாவை தவிர சமூக பிரச்னைக்காகவும் குரல் கொடுத்து வருகிறார் விஜய் சேதுபதி.

பல நிகழ்ச்சிகளில் விஜய் சேதுபதி கலந்துகொள்ளும்போது, மிகவும் எளிமையாக பேசுவார். இவர் விளம்பரங்களில் நடித்து அதில் வரும் தொகையை ஆதரவற்றோர்களுக்கு கொடுத்து உதவி வருகிறார். 


Advertisement