அட.. மைனா நந்தினியா இது! பட்டுபாவாடை, மல்லிகை பூ... சின்ன வயசுல எப்படியிருக்கார் பார்த்தீர்களா!!

அட.. மைனா நந்தினியா இது! பட்டுபாவாடை, மல்லிகை பூ... சின்ன வயசுல எப்படியிருக்கார் பார்த்தீர்களா!!


maina nandhini childhood photo viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பெருமளவில் வரவேற்பை பெற்ற சரவணன் மீனாட்சி தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தவர் நந்தினி. அதனை தொடர்ந்து அவர் பல தொலைக்காட்சியில் ஏராளமான தொடர்களிலும்,  சில படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகை நந்தினி சீரியல் நடிகரான யோகேஸ்வரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

மேலும் மைனா என அழைக்கப்படும் நந்தினி தற்போது விஜய் டிவியில் வேலைக்காரன் தொடரிலும் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து தற்போது நந்தினி மற்றும் யோகேஷ் இருவரும் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மைனா நந்தினி சிறுவயதில் அவரது தம்பியுடன் இருக்கும் அரிய புகைப்படம் ஒன்றை  தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.