ஒருவழியா முடிவாகிருச்சா! காதலியை கரம் பிடிக்கும் பிக்பாஸ் மகத்! எப்போ தெரியுமா?

ஒருவழியா முடிவாகிருச்சா! காதலியை கரம் பிடிக்கும் பிக்பாஸ் மகத்! எப்போ தெரியுமா?


mahat-pirachi-marriage-date-fixed

தமிழ் சினிமாவில் சிம்பு நடிப்பில் வெளிவந்த வல்லவன், காளை போன்ற திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் மஹத்.  அதனைத் தொடர்ந்து அவர் அஜித் நடிப்பில் வெளிவந்த மங்காத்தா திரைப்படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானார்.

பின்னர் அவர் பிரியாணி, வடகறி, வந்தா ராஜாவாதான் வருவேன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். மேலும் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில்  நடிகை யாஷிகாவுடன் காதல் என சர்ச்சையிலும் சிக்கினார். 

mahat

ஆனால் அவர் மிஸ் இந்தியா பட்டம் பெற்ற பிராச்சி மிஸ்ராவை  காதலித்து வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் மீண்டும் தனது காதலியுடன் இணைந்த நகத்திற்கு பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த வருடம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

திருமணம் எப்போது என தேதிகள் எதுவும் வெளிவராத நிலையில், தற்போது இது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது மஹத்திற்கு பிராச்சியுடன் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் திருமணம் நடைபெற உள்ளது.2 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.