சினிமா வீடியோ

கவினின் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட லாஸ்லியா.! வீடியோவை கண்டு வாயடைத்துப் போன ரசிகர்கள்!!

Summary:

Losliya dance to kavin song

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த 3 மாதமாக ஒளிபரப்பாகி  கடந்த சில வாரங்களுக்கு முன்பு முடிவடைந்த நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 3. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா. இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தது முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். மேலும் அவருக்கு என ஏராளமான ரசிகர்களும், ஆர்மியும்  உருவானது. 

மேலும்  சரவணன் மீனாட்சி புகழ் கவினும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும் ரசிகர்களிடையே பெரும் அளவில் பிரபலமான அவர் பிக்பாஸ் வீட்டில் அபிராமி சாக்ஷி மற்றும் லாஸ்லியாவின் அளிப்பதாக சர்ச்சையில் சிக்கினார்.

மேலும் இறுதியாக முதலில் கவினை பிடிக்காமல் இருந்த லாஸ்லியாவுக்கு காலப்போக்கில் கவினை பிடிக்க ஆரம்பித்தது. மேலும் லாஸ்லியாவின் மேல் காதல் வயப்பட்ட கவின் தனது காதலை அவரிடம் கூறினார். இருப்பினும் இதுகுறித்து வீட்டைவிட்டு வெளியேறியபின் இதுகுறித்து பேசிக் கொள்ளலாம் என இருவரும் முடிவெடுத்திருந்த நிலையில், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் இதுவரை சந்தித்து பேசிக்கொள்ளவில்லை. 

 இந்நிலையில் பிக்பாஸ் கொண்டாட்டத்திற்காக டான்ஸ் ஸ்டுடியோ ஒன்றில் லாஸ்லியா நடிகர் பயிற்சி எடுத்து வருகிறார். மேலும் கவின் பாடிய பாடலுக்கு லாஸ்லியா நடனம் ஆடியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement