பிக்பாஸ் லாஷ்லியாவுக்கு இன்று மிக முக்கியமான நாள்..! குவியும் வாழ்த்துக்கள்.! என்ன விஷயம் தெரியுமா.? - TamilSpark
TamilSpark Logo
சினிமா

பிக்பாஸ் லாஷ்லியாவுக்கு இன்று மிக முக்கியமான நாள்..! குவியும் வாழ்த்துக்கள்.! என்ன விஷயம் தெரியுமா.?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் மூன்று மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளராக வேலைபார்த்த லாஸ்லியா. பிக்பாஸ் வீட்டிற்குள் போனதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக தொடங்கினர் லாஸ்லியா.

அதன்பின்னர் நடிகர் கவினுடன் ஏற்பட்ட காதல் சர்ச்சையில் சிக்கி பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தார். இறுதியில் மூன்றாவது இடத்தை பிடித்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். குறுகிய காலத்திலையே ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் தற்போது கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உடன் 'ப்ரெண்ட்ஷிப்' மற்றும் நடிகர் ஆரி உடன் ஒரு படம் என்று கலக்கி வருகிறார்.

இந்நிலையில், லாஷ்லியாவுக்கு இன்று மிக முக்கியமான நாள். ஆம், இன்று தனது 24 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் லாஸ்லியா. லாஸ்லியாவிற்கு ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இருந்தும், அந்த ஸ்பெஷல் நடிகரிடம் இருந்து சமூக வலைதளத்தில் இன்னும் வாழ்த்து பதிவாகவில்லை என்று காத்திருக்கின்றனர் கவிலியா ரசிகர்கள்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo