ரூ.2 கோடி மதிப்பில் சொகுசு காரை வாங்கிய லோகேஷ் கனகராஜ்.!

ரூ.2 கோடி மதிப்பில் சொகுசு காரை வாங்கிய லோகேஷ் கனகராஜ்.!



Lokesh kanagaraj buy BMW car

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரூ.2 கோடி ரூபாய் மதிப்பில் சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இதனைத் தொடர்ந்து இவர் இயக்கிய கைதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரானார்.

lokesh kanagaraj

அதனைத் தொடர்ந்து இவர் விஜய் வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தையும், உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற மெகா ஹிட் திரைப்படங்களை இயக்கியிருந்தார். இதன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக உருவெடுத்துள்ளார்.

lokesh kanagaraj

தற்போது இவர் விஜய்யை வைத்து லியோ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரூ‌.2 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் சொகுசு காரை வாங்கியுள்ளார்.