லியோ போஸ்டர் ரெடி... "சும்மா கொளுத்தி போட்டுருக்காங்க".! ரசிகர்கள் கொண்டாட்டம்.!

லியோ போஸ்டர் ரெடி... "சும்மா கொளுத்தி போட்டுருக்காங்க".! ரசிகர்கள் கொண்டாட்டம்.!


leo-poster-tops-the-trending-in-x-platform

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் தனக்கென தனி சாம்ராஜ்யம் அமைத்து  ஆண்டு வருகிறார். ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே இவரது லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில்  போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இன்னும் ஒரு சில தினங்களில் லியோ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அப்டேட் இன்று வெளியாகுமா.? என அதன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே வெளியான நான் ரெடி தான் என்ற பாடல் ரசிகர்களிடம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Kollywoodஇந்நிலையில் சற்று முன்பு தளபதி விஜய் அவரது சமூக வலைதள பக்கத்தில் லியோ திரைப்படத்தின் போஸ்டரை பகிர்ந்திருக்கிறார். அதில் தெலுங்கு லியோ போஸ்டர் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் அவர் அணிந்திருக்கும் சட்டையில் கீப் காம் அண்ட் அவாய்டு த பேட்டில் என எழுதி இருக்கிறது.

இந்த போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே 30,000 லைக்  வாங்கி இருக்கிறது மேலும் 20000 அதிகமான  நபர்கள் இந்த போஸ்டரை மறு பதிவு  செய்திருக்கின்றனர். தளபதி ரசிகர்கள் இந்த போஸ்டரை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.