என்னையா சொல்றீங்க.? லியோ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் அடி வாங்கும்.! காரணம் என்ன தெரியுமா.?

என்னையா சொல்றீங்க.? லியோ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் அடி வாங்கும்.! காரணம் என்ன தெரியுமா.?


leo-movie-first-day-collection-will-be-affect-theatre-o

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாருக்கு இணையான பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் மற்றும் புகழுடனும், ரசிகர் பட்டாளத்துடனும் இருப்பவர் தளபதி விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படத்தை காண தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் உள்ளனர்.

இந்தத் திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 19-ம் தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் ரிலீசுக்கு முன்பாகவே இந்த திரைப்படம் 434 கோடி பிசினஸ் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Kollywoodஎனவே நிச்சயமாக லியோ திரைப்படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து தமிழ் சினிமாவில் புதிய சாதனையை படைக்கும் என அனைவரும் எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்நிலையில் லியோ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் அடி வாங்கும் என வெளியாகி இருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Kollywoodஇது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் பிரபல திரையரங்க உரிமையாளர் "தற்போது அரசாங்க விதிமுறைகளின் படி காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி வெளியிட வேண்டும். ஆனால் லியோ பட தயாரிப்பாளர் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி வேண்டி அரசிடம் விண்ணப்பித்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். ஒருவேளை அனுமதி கிடைக்கவில்லை என்றால் லியோ படத்தின் முதல் நாள் வசூலில் 40 சதவீதம் வரை அடி வாங்கும்" என தெரிவித்திருக்கிறார்.