ரொம்ப மிஸ் பண்றோம்.! லெஜெண்ட் அண்ணாச்சி வெளியிட்ட புகைப்படம்! கண்கலங்கும் ரசிகர்கள்!!

ரொம்ப மிஸ் பண்றோம்.! லெஜெண்ட் அண்ணாச்சி வெளியிட்ட புகைப்படம்! கண்கலங்கும் ரசிகர்கள்!!


legend-saravanan-arul-shares-photos-with-vivek

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக கொடிக்கட்டி பறப்பவர் நடிகர் விவேக். இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்துள்ளார். சின்னக் கலைவாணர் விவேக்கின் காமெடி சிரிக்க வைப்பதுடன், சிந்திக்கவும் செய்யும். இவருக்கு என பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

நடிகர் விவேக்கின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் இவ்வுலகில் இல்லை என்பதை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. விவேக் நடிப்பில் தற்போது இறுதியாக வெளிவந்துள்ள திரைப்படம் தி லெஜண்ட். 

இப்படத்தில் நடிகர் விவேக்கை கண்ட ரசிகர்கள் நல்ல கலைஞரை இழந்துவிட்டோமே என வருந்தியுள்ளனர். இந்நிலையில் தி லெஜண்ட் படத்தின் ஹீரோவான சரவணன் அருள் விவேக்குடன் இருந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது.