அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
ஜாலியோ ஜிம்கானா.! பீஸ்ட் படத்தில் இருந்து வெளிவந்த அசத்தலான புகைப்படம்! அட.. யாரெல்லாம் இருக்காங்க பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வரும் தளபதி விஜய் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, ஷான் டாம் சாக்கோ, செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ் உள்ளிட்ட ஏராளமானோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து படம் வெளியாவதற்கான பின்னணி வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி ரிலீசாகவுள்ளதாக கூறப்படுகிறது. பீஸ்ட் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடல் அண்மையில் வெளியாகி செம ஹிட்டானது.

அதனைத் தொடர்ந்து தற்போது ரசிகர்கள் அனைவரும் பீஸ்ட் படத்தின் ட்ரைலர் மற்றும் டீசரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் தற்போது பீஸ்ட் படத்தின் ஜாலியோ ஜிம்கானா பாடல் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அனிருத், பூஜா ஹெக்டே, நெல்சன், விஜய் ஆகியோர் உள்ளனர். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
