"என்னது? வாலி படத்தில் நடிக்க இருந்தது இவரா?!" புதிய தகவல்!

"என்னது? வாலி படத்தில் நடிக்க இருந்தது இவரா?!" புதிய தகவல்!


Latest news about Vali movie actress

1992ம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா இயக்குனராக அறிமுகமான திரைபபடம் தான் "வாலி". இந்தப் படத்தில் முதன் முதலாக அஜித் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார். இது ஒரு ரொமான்டிக் திரில்லர் படமாக வெளிவந்தது. இதில் அஜித் ஒரு நெகடிவ் ரோலில் நடித்திருந்தார்.

simran

மேலும் இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். "அவள் வருவாளா" படத்திற்கு பிறகு அஜித்-சிம்ரன் ஜோடி இணைந்த இரண்டாவது திரைப்படம் வாலி. இந்தப் படத்தின் ரொமான்ஸ் காட்சிகள் இன்றளவும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றன.

தற்போது இந்த படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் சிம்ரன் கேரக்டரில் முதலில் நடிக்கவிருந்தது கீர்த்தி செட்டி என்ற நடிகையாம். இவர் தேவதை, நினைவிருக்கும் வரை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சில காரணங்களால் இவர் வாலி படத்தில் நடிக்கவில்லையாம்.

simran

இதையடுத்து எஸ் ஜே சூர்யா ரோஜா, மீனா ஆகியோரை வாலி படத்தில் நடிக்க அணுகினாராம். ஆனால் அவர்களுக்கும் கால்ஷீட் பிரச்சனை இருந்ததால், கடைசியாக சிம்ரனிடம் சென்று கேட்டுள்ளார் எஸ். ஜே சூர்யா. இந்தத் தகவல் பல வருடங்கள் கழித்து இப்போது வெளியாகியுள்ளது.