லோகேஷ் கனகராஜை சுற்றி வளைத்த ரசிகர்கள்.. காரை பாதியில் விட்டுவிட்டு ஓடிய லோகேஷ்.?
தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து 4 படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும், நான்குமே முன்னணி ஹீரோக்களை வைத்து தான் இயக்கியுள்ளார்.

கார்த்தி, விஜய் மற்றும் கமலை வைத்து 3 ஹிட் படங்களை இயக்கி இருக்கும் லோகேஷ், தற்போது மீண்டும் லியோ படத்தில் விஜயுடன் இணைந்திருக்கிறார். செப்டம்பர் 19ம் தேதி லியோ படம் வெளியாகவுள்ளது.
இதைத்தொடர்ந்து, ரஜினியுடன் லோகேஷ் அடுத்த படத்தில் இணைய போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள ஒரு ஹோட்டலில் 2 நாட்கள் தங்கியிருந்தார் லோகேஷ்.

இவர் அங்கு இருப்பதை தெரிந்துகொண்ட ரசிகர்கள், ஹோட்டலில் கூட்டமாக திரண்டு அவரை சுற்றி வளைத்தனர். இதனால் தனது காரில் செல்லமுடியாத லோகேஷ், பைக்கில் ஏறி சென்று, பின் தனது காருக்கு மாறி சென்றார் என்று கூறப்படுகிறது.