சினிமா

என்னது.. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறாரா லட்சுமி ராமகிருஷ்ணன்! ஒருவழியாக அவரே போட்டுடைத்த உண்மை!!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் பெருமளவில்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் பெருமளவில் ரசிக்கப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தமிழில் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்கு சீசன்கள் முடிவடைந்து விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கப்பட உள்ளது.

தமிழில் நான்கு சீசன்களையும் நடிகர் கமல் தொகுத்து வழங்கினார். மேலும் 5வது சீசனையும் நடிகர் கமலே தொகுத்து வழங்கவுள்ளார். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான இரு ப்ரமோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பும் கிளம்பியுள்ளது.

இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளதாக பல பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டு வருகிறது. இந்நிலையில் நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணனும் பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்வதாக தகவல்கள் பரவி வந்தது. இந்நிலையில் இதுக்குறித்து விளக்கமளித்து லட்சுமி ராமகிருஷ்ணன் தனது டிவிட்டர் பக்கத்தில், ஒவ்வொரு சீசனிலும் பிக்பாஸ் போட்டியாளர் பட்டியலில் நான் எனது பெயரை பார்க்கிறேன். நான் பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ளவில்லை. தயவுசெய்து பட்டியலில் இருந்து என் பெயரை நீக்கவும் என பதிவிட்டுள்ளார்.


Advertisement