என்னப்பா இப்படி பண்றீங்களே!. எல்லாம் வளர்ப்பு!. தாறுமாறாக கேள்வி கேட்டவரை வெளுத்து வாங்கிய லட்சுமி ராமகிருஷ்ணன்.!lakshmi ramakrishnan answered harshly in twitter

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் நபர் ஒருவர் தன்னை மரியாதையை இல்லாமல் ஒருமையில் பேசியதற்கு  சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

சமூகத்தில் நடக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் தைரியமாகவும், வெளிப்படையாகவும் குரல் கொடுப்பவர் லட்சுமி ராமகிருஷ்ணன்,மேலும் இவர் இதற்காக தனியார் தொலைக்காட்சி ஒன்றிலும் நிகழ்ச்சி நடத்தினார்.

அதுமட்டுமின்றி சமூகவலைத்தளங்களிலும் குற்றங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருவதை வழக்கமாக வைத்திருந்தார் .

இந்நிலையில் உச்சநீதிமன்றம் திருமணத்துக்கு பிறகான தகாத உறவு குற்றமில்லை என தீர்ப்பு வழங்கியது.

இது குறித்து நபர் ஒருவர் லட்சுமி ராமகிருஷ்ணாவிடம், டுவிட்டரில்,  எல்லாவற்றுக்கும் கருத்து சொல்லும் நீ  இதை ஏன் எதிர்க்கவில்லை என மரியாதையின்றி  ட்வீட்  செய்திருந்தார்.

அதற்கு பதிலளித்த லட்சுமி ராமகிருஷ்ணன், முதலில் என் டுவீட்ஸ் படிங்க, நான் அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்துவதில்லை, மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பேன்.

அதனால் தான் இப்படி உங்களிடம் பேசுகிறேன், என் வளர்ப்பு என பதிவிட்டுள்ளார்.
 எகதாளமாய் கேள்வி கேட்ட நபர் ,மூக்குடைக்கும் பதிலடி கொடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன் .,