BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு ஜோடியாகும் கும்கி நாயகி.! யார்னு பார்த்தீங்களா.! வைரல் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் கும்கி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை லட்சுமி மேனன். விஜய் படத்திலேயே ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த அவர் தொடர்ந்து சுந்தரபாண்டி, பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன், ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம், மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
பைக்ல
அதனைத் தொடர்ந்து நடிகை லட்சுமி மேனனுக்கு பெருமளவில் பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. சில காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்த அவர் புலிக்குத்தி பாண்டியன் என்ற படத்தின் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுத்தார். பின்னர் சந்திரமுகி 2 படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் நடிகை லட்சுமி மேனன் தற்போது புதிய படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார்.

உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு ராஜசேகர பாண்டியன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஹீரோவாக பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி நடிக்கிறார். மேலும் அவர்களுடன் பிளாக் பாண்டி, வையாபுரி, ஜெயிலர் தன்ராஜ், மைம் கோபி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். அந்தப் படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது. அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.