நயன்தாராவை வருத்தப்பட வைத்த படக்குழு; ஷாக்கான ரசிகர்கள்.!



lady super star nayanthara

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. அவரை வருத்தப்பட வைத்த நிகழ்வு ஒன்று படப்பிடிப்பின்போது நடந்துள்ளது.

நயன்தாரா தற்போது தல அஜித்தின் விசுவாசம் மற்றும் ஐரா ஆகிய இரண்டு படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். இவ்விரண்டு படங்களின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும்  விஜய் அட்லி கூட்டணியில் உருவாகும் விஜய்யின் 63ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார்.

ஐரா படத்தை இயக்குனர் சர்ஜன் இயக்கு வருகின்றார். நயன்தாரா தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று நேரம் தவறாமை. அவ்வகையில் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு குறித்த நேரத்திற்கு முன்பே வந்துவிடுவாராம் அதன்பிறகு தான் இயக்குனர்கள் மற்றும் படக்குழுவினர் வருவதாக கூறப்படுகிறது.

இதனால் வருத்தமடைந்த நயன்தாரா இதுகுறித்து இயக்குனரிடம் பேசியுள்ளார். இதனால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை விரைவாக படம்பிடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.