திருமணம் நெருங்கிவந்த நிலையில், காதலனை தூக்கியெறிந்த குத்து ரம்யா.! காரணத்தை போட்டுடைத்த ரம்யாவின் தாய்!!

திருமணம் நெருங்கிவந்த நிலையில், காதலனை தூக்கியெறிந்த குத்து ரம்யா.! காரணத்தை போட்டுடைத்த ரம்யாவின் தாய்!!


kuthu ramya refused lover for politics

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, அதன்மூலம் பிரபலமானவர் நடிகை ரம்யா. படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்றதன் மூலம் குத்து ரம்யா என அனைவரும் இவரை அழைத்தனர். குத்து படத்தை அடுத்து பொல்லாதவன், சூர்யா நடிப்பில் வெளிவந்த வாரணம் ஆயிரம், ஜீவா நடிப்பில் சிங்கம் புலி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் ரம்யா.

மேலும் சினிமாவை தாண்டி காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட ரம்யா மாண்டியா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். பின்னர் தன்னை முழுநேர அரசியலில் ஈடுபடுத்திக்கொண்ட அவர், காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பிரிவின் தலைவியாக செயல்பட்டு வந்தார். சமீபத்தில் இந்த பதிவியிலிருந்து விலகிக்கொண்டார். பின்னர் நடந்துமுடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த நிலையில் திவ்யா இருக்கும் இடம் தெரியாமல் போனார்.

         ramya

இந்நிலையில் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் ரபேல் என்பவருடன், ரம்யாவுக்கும்  துபாயில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. பின்னர் இருவருக்கும் முரண்பாடு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது ரம்யாவின் தாய் ரஞ்சிதா விளக்கமளித்துள்ளார். ரம்யா தற்போது திருமணம் செய்யும் எண்ணத்தில் இல்லை. அரசியலில் கவனம் செலுத்தியபோது, ரபேல் தொழிலில் கவனம் செலுத்தி வந்தார்.

இதனால் அவர்கள் இருவரும் அதிகமாக சந்திக்க நேரம் கிடைக்கவில்லை. ரம்யாவுக்கு இந்தியாவை விட்டு செல்ல விருப்பமில்லை. ரபேலுக்கு போர்ச்சுக்கல் நாட்டை விட்டு வர பிடிக்கவில்லை. இதனால், இருவரும் சுமூகமாக பேசி பிரிந்தனர். தற்போது  நல்ல நண்பர்களாக உள்ளனர் என கூறியுள்ளார்.

.