வாவ்.. நடிகை குஷ்புதானா இது! இளம் ஹீரோயின்களே பொறாமைப்படும் அளவிற்கு, வேற லெவலில் சொக்கியிழுக்கிறாரே!

வாவ்.. நடிகை குஷ்புதானா இது! இளம் ஹீரோயின்களே பொறாமைப்படும் அளவிற்கு, வேற லெவலில் சொக்கியிழுக்கிறாரே!


kushbu-weight-loss-latest-photo-viral

தமிழ் சினிமாவில் வருஷம் 16 என்ற படத்தில்  நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை குஷ்பு. அதனை தொடர்ந்து அவர் ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார் என பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.  நடிகை குஷ்பு தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி குஷ்பு ஏராளமான சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். அவர் தற்போது  ரஜினி நடிப்பில் உருவாகும் அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் குஷ்பு தற்போது உடல் எடையை குறைத்து செம ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவர் தற்போது இளம் ஹீரோயின்களே பொறாமைப்படும் அளவிற்கு மஞ்சள் நிற புடவையில்  பேரழகில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி  லைக்ஸ்களை குவித்து வருகிறது. நடிகை குஷ்பு கலர்ஸ் தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக கலந்து கொள்ள இருக்கின்றார் என்பது குறிப்பிடதக்கது.