அடக்கொடுமையே, நடிகை குஷ்பூவா இது.! இந்த புகைப்படத்தை பார்த்தால் நீங்களே நம்பமாட்டீங்க!!

அடக்கொடுமையே, நடிகை குஷ்பூவா இது.! இந்த புகைப்படத்தை பார்த்தால் நீங்களே நம்பமாட்டீங்க!!



kushboo oldage challenge photo

 தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை குஷ்பூ. மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் தற்போது தமிழ் பெண்ணாகவே மாறிவிட்டார். ரஜினி, கமல்,பிரபு என பல பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார் .

பிரபல நடிகையாக இருந்த இவர் இயக்குனர் சுந்தர் சி அவர்களை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் அரசியலில் களமிறங்கிய நடிகை குஷ்பூ காங்கிரசில் தன்னை அர்பணித்துக்கொண்டார்  இந்நிலையில் தற்போது தேசிய காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளார் நடிகை குஷ்பூ.

kushboo

மேலும் வெள்ளித்திரையில் அசத்தி வந்த குஷ்பூவின் கவனம் சின்னத்திரை பக்கம் திரும்பியது. அதன்படி ஏராளமான தொடர்களில் நடித்தார். மேலும் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

இந்நிலையில் தற்போது #oldfacechallenge என ட்விட்டரில் பெருமளவில் டிரெண்டாககி வருகிறது. இதில் பலரும் வயதான பின் எப்படியான தோற்றத்தில் இருப்போம் என எடிட் செய்து பதிவு செய்துவருகின்றனர்.மேலும் நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் வயதான புகைப்படங்கள் சமீபத்தில் வைரலானது.


இந்நிலையில்  தற்போது நடிகை குஷ்பூ வயதான பின் எவ்வாறு  இருப்பார் என்ற புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் குஷ்பூவா இது என அதிர்ச்சி அடைந்துள்ளனர்.