சினிமா

பல கிலோ எடையை குறைத்து ஆள் அடையாளமே தெரியாமல் அழகு தேவதை போல் மாறிய நடிகை குஷ்பூவின் மகள்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!

Summary:

Kushboo daughter shocking transformation

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை குஷ்பூ. 90 கால கட்டங்களில் இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர். முதன் முதலாக ஒரு நடிகைக்கு கோவில் காட்டியதும் இவருக்கே என்று கூறலாம். அந்த அளவிற்கு இவருக்கு ரசிகர்கள் அதிகம்.

சினிமவில் பிசியாக இருந்த இவர் பிரபல இயக்குனர் மற்றும் நடிகருமான சுந்தர் சி அவர்களை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கை, அரசியல் என செட்டிலாகிவிட்டார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகளும் இருக்கிறார்கள்.

குஷ்பூவின் மகள்கள் இருவரும் அவரை போலவே சற்று பப்லியாக, குண்டாக இருப்பார்கள். இதனால் நெட்டிசன்கள் சிலர் அவர்களின்  உருவத்தை வைத்து கேலி செய்து வந்தநிலையில் நடிகை குஷ்புவின் அழகு மகள் அனந்திதா தனது உடல் எடையை கடுமையாக குறைத்து பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாக மாறியுள்ளார்.

தன்னை பற்றி பேசிய நெட்டிசன்களின் வாய்யை அடைக்கும் வகையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

 


Advertisement