சினிமா

பிக்பாஸ் லாஸ்லியாவுக்கு பட வாய்ப்பா? வெளிப்படையாக போட்டுடைத்த பிரபல முன்னணி இயக்குனர்.!

Summary:

ks ravikumar talk about losliyaa

பிக்பாஸ் சீசன்மூன்று கமல்ஹாசன் தொகுத்து வழங்க மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மொத்தம் 16 பிரபலங்கள் போட்டியாளராக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, ரேஷ்மா, சரவணன்,சாக்‌ஷி ஆகியோர் கடந்த நாட்களில் வெளியானர். அதனை தொடர்ந்து வைல்டுக்கு கார்டு எண்ட்ரியாக நடிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்கு வந்தார்.

பின்னர் விருந்தினராக மற்றொரு போட்டியாளராக வனிதா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். அவர் வந்ததுமே  பல பிரச்சினைகள் வெடித்து வீடே இரண்டானது. இந்நிலையில் அபிராமி குறைந்த ஓட்டுக்களை பெற்று வெளியேறியநிலையில், தற்கொலை முயற்சி மேற்கொண்டதற்காக நடிகை மதுமிதா வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். 

bigg boss season 3 tamil க்கான பட முடிவு

இவ்வாறு பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், சாண்டி, கவின் சேரன் மற்றும் கஸ்தூரி ஆகியோர் கடந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் கஸ்தூரி குறைந்த வாக்குகளை பெற்று நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் அவர்களுடைய ஆசிரியர்கள் பேசிய ஆடியோ ஒலிபரப்பப்பட்டது. அப்பொழுது சேரனுக்காக  அவரது இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் பேசிய ஆடியோ ஒலித்தது.

  losliya tharshan க்கான பட முடிவு

அப்பொழுது அவர் சேரன் அவரிடம் அசிஸ்டன்டாக பணியாற்றியது குறித்து மிகவும் நெகிழ்ச்சியுடன் பேசினார். மேலும் பிற போட்டியாளர்கள் குறித்தும்பேசிய அவர் லாஸ்லியா நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தால் அவருக்கு நிச்சயம் ஹீரோயினாகவும் வாய்ப்பு உள்ளது. அவரை திரையுலகம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது என வெளிப்படையாக  கூறியுள்ளார். மேலும் தர்ஷன் நடிகர் மாதவன் போல் உள்ளதாகவும் கே. எஸ் ரவிகுமார் கூறியுள்ளார்.


Advertisement